ஆமதாபாத்
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் இது அதிக மதிப்பு கொண்டதாக இருப்பதாகாவும், தற்போது பிடிபட்டது ஹெராயின் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத உற்பத்தி இங்கிருந்து நடக்கிறது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.