தேசிய செய்திகள்

புதிய ரூ.200 நோட்டு தீபாவளிக்கே சந்தைக்கு வரும்?

புதிய ரூ.200 நோட்டு தீபாவளிக்கே சந்தைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலாக புதிய ரூ.500, 2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியது, அது மறுக்கப்பட்டது. சமீபத்தில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது என மீடியா தகவல்கள் வெளியாகியது. புதிய 200 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.

சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் சுங்வார் கூறினார்.

புதிய ரூ.200 நோட்டுகள் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கடந்த மாதமே தயாராகி விட்டது. அந்த நோட்டுகள் இந்த மாதம் (ஆகஸ்டு) புழக்கத்துக்கு வரும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் புதிய ரூ.200 நோட்டுகள் உண்மையில் தீபவாளியின் போதே மார்க்கெட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புகள் சுழற்சியில் அமைக்க ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கு மேல் எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதனால் தீபாவளியின் போதே ரூ. 200 நோட்டு வெளிவரும் .

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை