தேசிய செய்திகள்

அதிக மதிப்புடைய ரூ 2000, 500 நோட்டுகள் தேவையில்லை - சந்திரபாபு நாயுடு

அதிக மதிப்புள்ள ரூ 2,000 மற்றும் 500 நோட்டுக்கள் தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

தினத்தந்தி

அமராவதி

ஆனால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரவில்லை. நமக்கு ரூ 2,000 மற்றும் ரூ 500 மதிப்புள்ள நோட்டுக்கள் தேவையில்லை. குறைந்த மதிப்புடைய ரூ 200 மற்றும் 100 நோட்டுக்களே போதும். நாம் பெருமளவில் இணையதள வசதிகளை பயன்படுத்தினால் இறுதியில் ஊழலை ஒழித்து விடலாம் என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.

தேர்தல் சமயத்தில் இவற்றின் விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதே நாயுடுவின் கருத்து. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நாயுடு ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பரிமாற்றங்களை மேம்படுத்தும் மாநில முதலமைச்சர்கள் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக நாயுடுவை மோடி நியமித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை