தேசிய செய்திகள்

குஜராத்தில் சிக்கிய ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின்; என்.ஐ.ஏ. விசாரணை

குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருள் சிக்கிய வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துள்ளது.

தினத்தந்தி

வதோதரா,

குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்திற்கு சமீபத்தில் சுண்ணாம்புக்கல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் இருந்து சரக்குகள் வந்தன. அவற்றை சோதனை செய்ததில், அவற்றில் 2,988 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.

தொழிலதிபர் கவுதம் அதானி நிர்வகித்து வரும் துறைமுகத்தில் இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து இதுபற்றிய வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை)

விசாரணை மேற்கொள்ளும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட ஹெராயின் போதை பொருள் சிக்கிய வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு