தேசிய செய்திகள்

ரூ.2,654 கோடி வங்கி மோசடி குஜராத் தொழில் அதிபர், மகன்களுடன் கைது சி.பி.ஐ. நடவடிக்கை

ரூ.2,654 கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபரையும், அவரது மகன்களையும் கைது செய்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து உள்ளது. #BankFraud

புதுடெல்லி,

வதோதராவை சேர்ந்த தொழில் அதிபர் சுரேஷ் நாராயண் பட்னாகர் மற்றும் அவரது மகன்கள் அமித், சுமித்தை ராஜஸ்தானில் சிபிஐ கைது செய்தது. இவர்களுடைய டைமண்ட் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனம் 11 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.2 ஆயிரத்து 654 கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தவில்லை. 201617ம் நிதி ஆண்டில் இந்தக் கடன்கள் வாராக்கடன்கள் என அறிவிக்கப்பட்டன. வங்கிகளின் கூட்டமைப்பு, சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது. சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வருமான வரித்துறையும் விசாரணை மற்றும் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

வங்கிக்கடன்கள் பெறுவதற்காக சுரேஷ் நாராயண் பட்னாகரும், அவரது மகன்களும் போலியான ஆவணங்களை சமர்பித்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுரேஷ் நாராயண் பட்னாகரும், அவரது மகன்களும் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பரஸ் மகால் ஓட்டலில் பதுங்கி உள்ளதாக சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த சிபிஐ அதிகாரிகள், அம்மாநில பயங்கரவாத தடுப்பு படை உதவியுடன் அவர்களை கைது செய்தது.

கைது செய்யப்பட்டு உள்ள இவர்களது பெயர்கள், பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள வங்கிக்கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம் பெற்றும், கடன் உத்தரவாத நிறுவனத்தின் எச்சரிக்கை பட்டியலில் இடம் பெற்றும் வங்கிகளில் கடன்கள் பெற்று இருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்