தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது; குஜராத் பயணி கைது

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. இதுதொடர்பாக குஜராத் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காங்கிற்கு புறப்பட்டு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் அமெரிக்க நாட்டு பணத்தை ஒரு பயணி எடுத்து செல்வதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் ரூ.27 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருந்தது.

அந்த பணத்தை பாங்காங்கிற்கு அவர் சட்டவிரோதமாக எடுத்து செல்ல முயன்றது தெரிந்தது. இதனால் அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பயணி குஜராத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்து உள்ளது. அவரது மற்ற விவரங்கள் தெரியவில்லை.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்