கவுகாத்தி,
பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.
இந்தநிலையில், உலக தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான அவருக்கு அசாம் மாநில முதல்மந்திரி சர்பானந்தா சோனோவால் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.