தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு 10 மாதங்களில் ரூ.6.95 லட்சம் கோடி நேரடி வரி வசூல்

மத்திய அரசு 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 10 மாத காலகட்டத்தில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி நேரடி வரி வசூல் செய்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

201718 நிதி ஆண்டுக்கான நேரடி வரியின் திருத்திய மதிப்பீடான ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் இது 69.2 சதவீதம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜனவரி, 2018 வரையிலான நேரடி வரி நிகர வசூல் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி என தற்காலிக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.3 சதவீதம் அதிகம் ஆகும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும், பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி நிகர வசூல் 19.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. தனிநபர் வருமான வரி நிகர வசூல் 18.6 சதவீதம் பெருகி இருக்கிறது.

இதே கால கட்டத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி, வரி செலுத்துவோருக்கு திரும்ப தரப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்