தேசிய செய்திகள்

2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய உள்துறை அமைச்சகம்

2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை நாடு முழுவதும் சென்சஸ் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக சென்சஸ் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு சென்சஸ் எடுக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர் என்றும், முகாம்களுக்கு வெளியே 34,134 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் உள்ள முகாமில் 54 இலங்கை தமிழ் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் விதிகளை மீறியதாக இதுவரை 20,600 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு