திருவனந்தபுரம்,
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.7,340 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் கேரளாவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விபின் மாலிக் தலைமையிலான குழுவினர் 2 நாட்களாக ஆய்வு செய்தனர். கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை நேற்று முன்தினம் மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 2வது நாளாக நேற்றும் மத்திய குழுவினர் கேரள கடற்கரை பகுதியில் சேதம் அடைந்த இடங்களை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் செயலாளர் விபின் மாலிக் கூறுகையில், கேரளாவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.133 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிதி உடனடியாக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும் மாயமான மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.