தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ராணுவத்தில் சேர்க்க சதி; ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு

அக்னிபத் திட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ராணுவத்தில் சேர்க்க சதி நடப்பதாக ராமலிங்கரெட்டி குற்றம்சாட்டினார்.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-

அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்ய இளைஞர் அணியினர், மாணவ அமைப்பினர் இப்போது இருந்தே அயராது உழைக்க வேண்டும்.

மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு