ஐதராபாத்,
தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:-
இந்திய தாயின் மகன், அவர் எந்த மொழி பேசினாலும், எந்த பிராந்தியத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்தவகை வழிபாட்டை கடைபிடித்தாலும் அல்லது எந்த வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லை என்றாலும் அவர் இந்துதான். அந்தவகையில் ஆர்.எஸ்.எஸ்.சை பொறுத்தவரை இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினர்தான்.
ஆர்.எஸ்.எஸ். அனைவரையும் ஏற்றுக்கொள்ளும், அவர்கள் நன்மைக்காக சிந்திக்கும், அவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல விரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.