மும்பை,
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. எனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அந்நியச்செலவாணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 காசுகள் சரிந்து ரூ.72.65 ஆக உள்ளது.
சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதை சந்தை வல்லுநர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், ரூபாய் மதிப்பு 34 பைசா உயர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.84 ஆக இருந்தது.