தேசிய செய்திகள்

உக்ரைன்-ரஷியா போர்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படையெடுப்பை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உக்ரைன் மீதான போரை தொடர்ந்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி பேசினார். அப்போது உடனடியாக போரை நிறுத்துமாறு வலியுறுத்தியதுடன், உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்