கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றிய நாள்முதல் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் இறுதிகட்ட பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன் பேசினேன். ஆப்கானிஸ்தான் பற்றிய எங்கள் விவாதங்கள் தொடர்ந்தன. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு