தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நாளை பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இன்றுடன் (17ம் தேதி) பணி ஓய்வு பெற உள்ள ரஞ்சன் கோகாய் தனது கடைசி வேலைநாள் பணியை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பணியை முடித்துக்கொண்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மரியாதை செலுத்தினார்.

ரஞ்சன் கோகாயின் பணி ஓய்வையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து எஸ்.ஏ. பாப்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை (18 ம்தேதி) பதவியேற்க உள்ளார். அவர் உச்சநீதிமன்ற 47-வது தலைமை நீதிபதி ஆவார். அவர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வரை அந்த பதவியில் நீடிப்பார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்