தேசிய செய்திகள்

சபரிமலை சீசன்: பம்பை-தென்காசி இடையே இன்று முதல் சிறப்பு பஸ்கள்

முதல் கட்டமாக நேற்று கோயம்புத்தூர் - பம்பை இடையே சிறப்பு பஸ் சேவை தொடங்கியது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா இடையே போக்குவரத்து சேவை நடத்த 67 வழித்தடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று கோயம்புத்தூர் - பம்பை இடையே சிறப்பு பஸ் சேவை தொடங்கியது. அதன்படி கோவையில் இருந்து இரவு 9.30 மணிக்கும், பம்பையில் இருந்து காலை 9 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

இதுபோல் இன்று (சனிக்கிழமை) முதல் பம்பை - தென்காசி இடையே சிறப்பு பஸ் வசதி தொடங்குகிறது. இந்த பஸ்கள் தென்காசியில் இருந்து மாலை 7 மணிக்கும், பம்பையில் இருந்து காலை 9 மணிக்கும் இயக்கப்படும். இவை தவிர பழனி, திருநெல்வேலி, கம்பம் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கர்நாடகாவிற்கும் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை