தேசிய செய்திகள்

சபரிமலை மகரவிளக்கு பூஜை: பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என அறிவிப்பு

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பல்வேறு இடர்பாடுகளை கடந்து தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறள்ளது. இதையடுத்து, வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்ய இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கோயிலுக்கு தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...