தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனையில் இருந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ்

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கடந்த 17-ந்தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேவை ஈஷா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில், கடுமையான தலைவலி காரணமாக புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 17-ந்தேதி அவருக்கு அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல்நலம் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் விசாரித்து அறிந்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் குணமடைந்து வந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. சத்குருவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் வினித் சூரி, சத்குரு உடல்நலம் தேறி வருகிறார். அவருடைய உடல் மற்றும் முக்கிய பாகங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றன என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலம் முன்னேறிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்