தேசிய செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என சமாஜ்வாடி அறிவிப்பு

உத்தரபிரதேச மகாகூட்டணி முறிந்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக சமாஜ்வாடி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மகாகூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தேர்தல் முடிந்ததுமே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இனிவரும் தேர்தலை தனித்து சந்திப்போம் என்று அறிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சியும் 2022 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனாலும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் கூறினார். அந்த மாநிலத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் பா.ஜனதாவை எதிர்த்து சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட உள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்