புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் சவுத்ரி சுக்ராம்சிங் யாதவ், தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக முறையிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது:-
அரசின் பார்வையில் தவறாக படும் எதையும் நான் செய்யவில்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து பதிவிட்டேன். அதற்காக என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், இதற்கென உரிய வழிமுறை உள்ளது. சபைத்தலைவரிடம் எழுத்து மூலம் புகார் அளியுங்கள் என்று கூறினார்.