தேசிய செய்திகள்

ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து -3 பேர் பலி

ஒடிசாவின் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

புவனேஷ்வர்,

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு கவிழ்ந்தது.

இதனால் சரக்கு பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. விபத்து குறித்த விரிவான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை