புதுடெல்லி,
உலக சுற்றுலா தினத்தையொட்டி தேசிய சுற்றுலாத்துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 76 விருதுகளை சுற்றுலாத்துறை இணை மந்திரி பிரகலாத் படேல் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் புதிய பிரிவின் கீழ் மேலும் விருதுகள் வழங்கப்படும் என கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு முதல் சுற்றுலாத்துறை விருதுகளில் ஒரு புதிய பிரிவும் சேர்க்கப்படுகிறது. அதன்படி கடினமான நேரங்களில் சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாத்தல், உடமைகளை மீட்க உதவுதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலான நேரங்களில் உதவுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவோருக்கு விருது வழங்கப்படும் என்று கூறினார்.