தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு; சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்ற முறை நடந்த நீட் தேர்வில் குளறுபடி இருந்தது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிற மாநிலத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் எளிமையாக இருந்தது எனவும் தமிழகத்தில் கடினமாக இருந்தது எனவும் கூறப்பட்டன.

இது தொடர்புடைய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளறுபடி இல்லாமல் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உறுதியளித்தது.

வருகிற 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்