தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அடுத்தவாரம் மூடப்படுகிறது

டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அடுத்த வாரம் மூடப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாட்டின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிந்ததால், இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

இதையடுத்து, சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையத்தை மூட உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் குணம் அடைந்ததும், அடுத்த வாரம் சிகிச்சை மையம் மூடப்படும் என்று இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்