கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மைசூரு-தூத்துக்குடி ரெயில் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்பு - தென்மேற்கு ரெயில்வே தகவல்

மைசூரு-தூத்துக்குடி ரெயில் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மைசூரு-தூத்துக்குடி இடையே இயங்கும் சிறப்பு ரெயில் (06236) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தூத்துக்குடி-மைசூரு ரெயில் (06235) வருகிற 30-ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ரெயில் சேவை ஏப்ரல் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06526) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் (06525) பிப்ரவரி மாதம் 2-ந் தேதியுடன் நிறைவு பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட ரெயில்கள் உள்பட 78 ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை