சிவமொக்கா;
மணமகள் தேவை
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அந்த பெண் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக அவர் ஆன்லைன் மூலம் மணமகனை தேடிபாத்து உள்ளார்.
அப்போது பெங்களூருவில் தனியார் நிறுவன அதிகாரியான விஜயராஜ் கவுடா என்பவர் மணமகள் தேவை என்ற விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார். இந்த விளம்பரத்தை பாத்த இளம்பெண், அவரை செல்போன் மூலம் தொடர்ந்து கொண்டு பேசினார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு விஜயராஜ் கவுடாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை
இந்த நிலையில் விஜயராஜ் கவுடா கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி இளம்பெண்ணை தொடர்பு காண்டு, தனது வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வருமான வரித்துறையினர் வந்து சோதனை நடத்துவதாக கூறியுள்ளார். இதனால் தனக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறியுள்ளார்.
அந்த பணத்தை தந்து உதவினால் சில நாட்களில் திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய இளம்பெண், விஜயராஜ் கூறிய வங்கி கணக்கிற்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை பல்வேறு தவணைகளாக ரூ.13 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதையடுத்து இளம்பெண்ணிடம், விஜயராஜ் மேலும் பணம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தான் இதுவரை காடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டு உள்ளார். அப்போது விஜயராஜ், செல்போன் அழைப்பை துண்டித்து உள்ளார்.
இளம்பெண் மீண்டும் அழைத்த போது அவரது போன் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. அப்போதுதான் விஜயராஜ் தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. உடனடியாக இவர் இதுகுறித்து சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராஜ் கவுடாவை வலைவீசி தேடிவருகின்றனர்.