தேசிய செய்திகள்

ராகேஷ் அஸ்தானா விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராகேஷ் அஸ்தானா விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்த ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் பொது இயக்குநராக மத்திய அரசு ஜனவரி 18 ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி ஐகோர்ட், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்