தேசிய செய்திகள்

காணொலி விசாரணையில் பங்கேற்பதை அடிப்படை உரிமையாக அறிவிக்க கோரி மனு

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு, காணொலி விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நேரடி விசாரணையை ஆகஸ்டு 24-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

அதை எதிர்த்து அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வக்கீல்கள், மனுதாரர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கோர்ட்டுகளின் காணொலி விசாரணையில் பங்கேற்பதை அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. காணொலி வாயிலாக மட்டுமே வழக்குகளை விசாரித்தால் இளம் வக்கீல்கள் எப்படி கற்றுக் கொள்வார்கள், நேரடி விசாரணையின் போதுதான் கண்ணுக்கு கண் தொடர்பு இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, காணொலி விசாரணையும், நேரடி விசாரணையும் தொடர வேண்டும் என்றே கோருகிறோம் என வாதிட்டார். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காணொலி விசாரணையில் பங்கேற்பதை அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க இந்திய பார் கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு உத்தரவிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து