தேசிய செய்திகள்

காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு

காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என எழுதப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. #MPPolice

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் அம்மாநில இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனையின் போது இளைஞர்கள் வரிசையில் நின்ற போது அவர்கள் எந்த பிரிவினர் என்பது தொடர்பாக அவர்கள் மார்பில் எழுதப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என இளைஞர்களின் மார்பில் எழுதப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட எஸ்பி விரேந்திர குமார் சிங் பேசுகையில், ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்களின் மார்பில் அவர்களுடைய பிரிவை எழுதவேண்டும் என்று எதுவும் உத்தரவிடப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றம் உறுதியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், என்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக மாநிலத்திற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு தெரியவந்து உள்ளது. டிஜிபி ரிஷி குமார் சுக்லா பேசுகையில், மோசமான எண்ணத்தில் இச்சம்பவம் நடைபெறவில்லை என்றார். உடல்தகுதி தேர்வில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது,என நியாயப்படுத்தி உள்ளார்.

மாநில சுகாதாரத் துறையின் தகவல்களின்படி 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது. இளைஞர்களின் நலனுக்காகவே இந்த குறியீடு வைக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகமும் கூறிஉள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்