தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி விசாரணை

முன்னதாக இந்த மனுவை 30-ந்தேதி விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட்டு அறிவித்து இருந்தது.

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் வரும் 28-ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது.

சிறப்பு தீவிர திருத்தம்

டெல்லியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சத்துக்கு அதிகமானோர் நீக்கப்பட்டு இருந்தனர். இதில் விடுபட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்ப்பதற்கான காலக்கெடுவை இந்த மாதம் 30-ந்தேதி வரை தேர்தல் கமிஷன் நீட்டித்து உள்ளது.

தேர்தல் கமிஷன்

முன்னதாக இந்த நடவடிக்கையின்போது சந்தேகத்துக்கு இடமான வாக்காளர்கள் என நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மனுவை 30-ந்தேதி விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட்டு அறிவித்து இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை

ஆனால் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 30-ந்தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாகவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் நேற்று ஆஜராகி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முன்கூட்டியே அதாவது 28-ந்தேதியே விசாரிப்பதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT