தேசிய செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடி; 4 பேர் மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஐகிரவுண்ட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்யாண்நகரில் வசித்து வருபவர் கோபால். இவர் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இந்த நிலையில் பெங்களூரு பென்சன் டவுனை சேர்ந்த அஜித் குமார், அருண்குமார், அப்பிகெரேயை சேர்ந்த விட்டல், தார்வாரை சேர்ந்த ஸ்ரேயாஸ் போகர் ஆகியோர் கோபால் மற்றும் அவரது நண்பர்கள் சிலரிடம் ரெயில்வே துறை அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்து இருந்தனர்.

இதுகுறித்து கோபால் அளித்த புகாரின்பேரில் ஐகிரவுண்ட் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு