போபால்,
இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, புளூ வேல். அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50வது தினத்தன்று தற்கொலை செய்துகொள் என்று நிபந்தனை விதிக்கிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம் உத்கிரிஷ்ட் வித்யாலாயாவில் 10-ம் வகுப்பு படித்து வரும் பிரஜபதி என்ற மாணவர் பள்ளியில் நடைபெற்ற வரும் காலாண்டு தேர்வில் வினாத்தாளில் ப்ளூ வேல் விளையாட்டு பற்றி எழுதி உள்ளார். அதில் ப்ளூ வேல் விளையாட்டில் 49 படிநிலைகளை பற்றி எழுதி உள்ளார். இறுதி டாஸ்கான தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி கட்டத்தில் டாஸ்கை செய்ய மறுத்ததால் ப்ளூ வேல் அட்மின் மிரட்டினர் என்றும், பெற்றோர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடைதாளை திருத்திய ஆசிரியை மாணவர் ப்ளூ வேல் விளையாட்டு பற்றி எழுதி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாணவருக்கு உதவ முன் வந்துள்ளார். மாணவரிடம் இது குறித்து கேட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் பிரஜனின் மொபைலில் கைகள் கிழித்த மாதிரியான புகைப்படங்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்டித்த போது பிரஜபதி கேட்க மறுத்துவிட்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து மாணவரின் நடவடிக்கை குறித்து கண்கானிக்க பெற்றோருக்கு ஆசியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மனரீதியாக மாணவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.