தேசிய செய்திகள்

அசாமில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு; கட்டிடங்கள் இடிந்து நாசம்

அசாம் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கவுகாத்தி,

அசாமில் மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள கைலகத்தி மாவட்டம் ராம்நாத்பூரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கூடத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் குடிநீர் தொட்டியும், கழிவறை கட்டிடமும் இடிந்து தரைமட்டமாகின.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பபிந்திரகுமார் நாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை