தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு

கடபா அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

தினத்தந்தி

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சிரிபாகிலு கிராமத்தை சோந்தவர் மோனாச்சா. இவரது மனைவி பீனா. இத்தம்பதியின் மகன் ரஃபீன்(வயது 14).

இந்த சிறுவன் புல்லோட்டில் உள்ள தனது பாட்டி சுந்தரி என்பவரின் வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் புல்லோடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தனது சக நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன், மதியம் வீட்டிற்கு வந்து சுவிட்ச் போர்ட்டில் இருந்த செல்போன் சார்ஜரை உருவினான்.

அந்த நேரம் பார்த்து திடீரென்று மின்னல் தாக்கியதில், சுவிட்ச் போர்டு வழியாக சிறுவனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன். இந்த சம்பவம் குறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது