தேசிய செய்திகள்

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காஷ்மீரில் பள்ளி ஆசிரியரின் உடல் கண்டெடுப்பு

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காஷ்மீரில் பள்ளி ஆசிரியரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்டிபோரா பகுதியை சேர்ந்தவர், அய்ஜாஸ் அஹமது லோனே. பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த இவரது வீட்டில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளித்ததாக சந்தேகித்த பயங்கரவாதிகள் இன்று காலை அய்ஜாஸ் அஹமது லோனேவின் கழுத்தை அறுத்து கொன்று இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு பின் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு