தேசிய செய்திகள்

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: அரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியை தொடர்ந்து அண்டை மாநிலமான அரியானாவில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

அரியானா,

டெல்லியில், காற்று மாசு பிரச்சினை நீடித்து வருகிறது. காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியை தொடர்ந்து அண்டை மாநிலமான அரியானாவில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் காற்று மாசுவை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காற்று மாசு காரணமாக அரியானாவில் உள்ள 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வித கட்டுமான பணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து அரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியானா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநில எல்லைகளிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்