தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் வரும் நவம்பர் 2ந்தேதிக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக்கூடம் திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் வருகிற அக்டோபர் 5ந்தேதி முதல் பள்ளி கூடங்களை மீண்டும் திறப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளிக்கூடங்களை திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி காணொலி காட்சி வழியே இன்று பேசும்பொழுது, பள்ளிகளை வருகிற அக்டோபர் 5ந்தேதி முதல் மீண்டும் திறப்பது என முன்பு முடிவு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சீருடை உள்ளிட்ட பொருட்களையும் அக்டோபர் 5ந்தேதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. எனினும், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளிக்கூடங்களை திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு வழங்க வேண்டிய 3 ஜோடி சீருடைகள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஒரு ஜோடி காலணிகள், 2 ஜோடி காலுறைகள், ஒரு பெல்ட் மற்றும் பள்ளிக்கூட பை ஒன்று ஆகியவை அக்டோபர் 5ந்தேதி அவர்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை