தேசிய செய்திகள்

7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு

7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அங்கு பள்ளிகள் கடந்த 7 மாதங்களாக செயல்படவில்லை.

பள்ளிகளை திறக்க மாநில நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. பாதுகாப்பு காரணங்களுக்கான குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வராததால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் காஷ்மீரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி ஸ்ரீநகரில் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், காஷ்மீரில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?