தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் வருகிற 2023-24 கல்வி ஆண்டிற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந் தேதி(நாளை மறுநாள்) மாநிலத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும். அதற்கான ஆயத்த பணிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இருக்கைகளுக்கு வர்ணம் பூசுவது உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் பள்ளி நிர்வாகங்கள் செய்து முடிக்க வேண்டும். விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. எனவே பள்ளிகளின் மேற்கூரைகள், சுவர்களை ஆய்வு செய்து, சேதம் கண்டறியப்பட்டால் சீரமைத்து கொள்ள வேண்டும். மேலும் அடுத்த வாரம் மழை பெய்து, பள்ளிகளுக்கு வரமுடியாத சூழல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டாலோ, குறிப்பிட்ட பள்ளிகள் விடுமுறை அறிவித்துவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்