தேசிய செய்திகள்

அதானி குழுமங்கள் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை நிராகரித்தது செபி

தங்கள் நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து இருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

 இந்தியாவின் பெரும் தொழில் குழுமமாக உள்ள அதானி நிறுவனம், கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்திற்கு பெரும் தலைவலியாக மாறின. அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. எனினும், தங்கள் நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.

இந்த நிலையில், இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபி, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து