தேசிய செய்திகள்

வருகிற 8 ந்தேதி நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு

வருகிற 8 ந்தேதி கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாடுமுழுவதும் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

கொரோனாவால் உலகமே பாதிக்கபட்டு உள்ள நிலையில் . மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் உலகின் பல நாடுகளிலும் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை 29 நாடுகள் தொடங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் தொடங்கியுள்ளது; மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவில் சில நாடுகள்; மற்றும் ரஷியா ஆகியவை தொடங்கி உள்ளன.

இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னர் தடுப்பூசி செயல்முறை தொடங்கி உள்ளது. 2021ஆம் ஆண்டின் மத்திக்குள், இந்தியா 30கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடிந்த அளவிற்கு நாடுமுழுவதும் எவ்வளவு பேருக்கு செலுத்தமுடியுமோ அதை செலுத்திமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதன்படி நாடுமுழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகளை எப்படி கொண்டுசெல்வது, யார் யாரெல்லாம் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியல்களையும் மத்திய அரசு தயாரித்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, மருத்துவத் துறை மற்றும் காவல்துறை, ராணுவத் துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

அதேபோல், கோவின் செயலிமூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்தவர்களுக்கும் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கவேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மாநில வாரியான விவரப் பட்டியல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த் நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 8 ஆம் தேதி அன்று ஒத்திகை நடைபெறும். ஒத்திகைக்கு பின்னர், அனைத்து மாநில அரசுகளிடம் அறிக்கை பெற்று தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்