கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலி

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் பாதும் பகுதியில் நக்சலைட்டுகள் பேனர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தீஸ்கார் ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறிய ரோந்து சென்றனர். அப்போது, ஒரு போலீஸ் ஏட்டு, நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த 'பிரஷர்' குண்டில் தவறுதலாக கால் வைத்து விட்டார்.

அடுத்த நொடி, குண்டு வெடித்தது. இதில், ஏட்டு அதே இடத்தில் பலியானார். அவர் பெயர் சஞ்சய் லக்ரா. சத்தீஸ்காரின் ஜஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு