தேசிய செய்திகள்

பா.ஜனதா, சிவசேனா இடையே இருப்பது அமீர்கான், கிரன் ராவ் உறவை போன்றது: சஞ்சய் ராவத்

பா.ஜனதா, சிவசேனா இடையே இருப்பது அமீர் கான், கிரன் ராவ் உறவை போன்றது தான் என சஞ்சய் ராவத் கிண்டலாக கூறினார்.

தினத்தந்தி

எதிரிகள் கிடையாது

மராட்டிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் அல்ல என கூறினார். மேலும் சிவசேனாவுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உருவாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை சிவசேனா கட்சி மறுத்து உள்ளது.

அமீர்கான், கிரன்ராவ் உறவு

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கிண்டலாக கூறுகையில், அமீர் கான், கிரன் ராவை பாருங்கள், அவர்களின் பாதை மாறிவிட்டது. ஆனாலும் நண்பர்களாக உள்ளனர். அதுபோல தான் இங்கும், பாதைகள் மாறிவிட்டன. ஆனால் நட்பு தொடருகிறது. அரசியலில் நட்பு இருக்கும். அதற்காக நாங்கள் மாநிலத்தில் ஆட்சி அமைக்க போகிறோம் என்று

அர்த்தம் இல்லை" என்றார்.

சமீபத்தில் நடிகர் அமீர்கான், கிரன் ராவ் தம்பதி விவாகரத்து செய்துகொண்டனர். அதேநேரத்தில் அவர்கள் 2 பேரும், "எங்கள் உறவில் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பல விஷயங்களில் இணைந்து செயல்படுவோம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்