புதுடெல்லி,
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நான் கோவிலுக்கு செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். எனது பயணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி சென்று செங்கோட்டையன், அங்கு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.