புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சட்ட மந்திரியுமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
2004ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சட்ட மந்திரியாக இருந்தார். பிறகு கர்நாடக ஆளுநராக 2009 - 2014ம் ஆண்டு வரை பணியாற்றினார். கேரளாவின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார்.
அவரது உடல் நிகம்பூத் காட் பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு எரியூட்டப்படும் என்று அவரது மகன் அருண் பரத்வாஜ் கூறி உள்ளார்.