மும்பை,
மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் இன்று திடீர் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிந்து 33,482 புள்ளிகளாக வர்த்தகம் இருந்தது. கிட்டதட்ட 4.6 சதவீதம் அளவுக்கு சென்செக்ஸ் சரிவு இருந்தது. நிப்டி 316 புள்ளிகள் சரிந்து 10,300 புள்ளிகளாக வர்த்தகம் இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் சரிவு மும்பை பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த திடீர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் ரூ.5.40 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலை அடைந்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 64.06 என்று வர்த்தகம் ஆன நிலையில், இன்று 64.38 ஆக வீழ்ச்சி அடைந்தது.