சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
பிரிந்து சென்றவர்களில் தினகரனை தவிர யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். தினகரன் ஒரு மண் குதிரை, அவரை யார் நம்பி சென்றாலும் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான்.
பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை வழங்கப்படும்.
செந்தில் பாலாஜி உள்பட எல்லோரையும் அனுப்பிவைத்து விட்டு பின்னர் தினகரனே திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.