தேசிய செய்திகள்

தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு; சீரம் நிறுவன தலைவர் தகவல்

தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தயாரிக்கும் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் பார்வையிட்டார். அப்போது உடன் இருந்த சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

தீ விபத்து காரணமாக கொரோனா தடுப்பு மருந்துக்கு பாதிப்பு இல்லை. சம்பவம் நடந்த கட்டிடத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி ஒரு கி.மீ. தொலைவில் நடந்து வருகிறது. ஆனால் விபத்து நடந்த கட்டிடத்தில் காசநோய் தடுப்பு மருந்து மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு பணி நடந்து வந்தது. அந்த தடுப்பு மருந்துகள் சேதமடைந்து உள்ளன. இந்த தீ விபத்து காரணமாக எங்களுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்