தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். அசோக் நகர் மாவட்டத்தின் சடோரா பகுதியில் உள்ள பங்கரியா-சக் கிராமத்தில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர்

இதேபோல் சத்தர்பூரில், காடிமல்ஹ்ரா பகுதிகளில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3-ஆம் வகுப்பு மாணவர் ரவீந்தர் ரைக்வார் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மகராஜ்பூர் பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.

குவாலியரில் உள்ள பிதர்வார் பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பன்னாவின் அஜய்கர் பகுதியில் 40 வயதான விவசாயி பலியானார். மாநிலத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்